TNPSC Thervupettagam

நெகிழ்வான பணவீக்க இலக்குக் கட்டமைப்பு 2026–2031

March 28 , 2026 3 days 47 0
  • நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) கட்டமைப்பின் கீழ், 2026–2031 ஆம் ஆண்டிற்கான பணவீக்க இலக்கை அரசு அறிவித்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட திருத்தத்தின் மூலம் இந்த FIT கட்டமைப்புக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப் பட்டது.
  • 2026–2031 ஆம் ஆண்டு காலக் கட்டத்திற்கான பணவீக்க இலக்கு 4% (நுகர்வோர் விலை குறியீடு - CPI) ஆகத் தொடரும் என்ற நிலையில், இதன் சகிப்புத்தன்மை வரம்பு 2% முதல் 6% வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி, 6 உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழு (MPC) மூலம் பணவீக்கத்தை நிர்வகிக்கிறது.
  • தொடர்ந்து 3 காலாண்டுகளுக்கு பணவீக்கம் 2%–6% வரம்பிற்கு வெளியே இருந்தால், அது கொள்கை தோல்வியாகக் கருதப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்