நெடுஞ்சாலைக் கிராமங்கள் (Highway village) மற்றும் நெடுஞ்சாலைப் பின்னல்கள் (Highway Nests)
August 4 , 2017 2827 days 1127 0
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி நாடு முழுவதும் 183 இடங்களில் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் உண்டான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான நடைமுறைகளை துவங்கி இருக்கிறது.
இந்த இடங்களில் அனைத்து வித வசதிகளும் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
"நெடுஞ்சாலை கிராமங்கள்" (Highway Villages) என்பது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் 5 ஏக்கருக்கு மேல் உருவாக்கப்படுகின்ற பல வசதிகளுடன் கூடிய அமைப்பாகும். அதற்கு குறைவான ஏக்கர் மதிப்பில் இருப்பது "நெடுஞ்சாலைப் பின்னல்" (Highway Nest) ஆகும்.
தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் இந்த வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.