நெடுஞ்சாலைப் பாதுகாப்பிற்கான சீரொளிக் கற்றை வழியான முப்பரிமாண உணர்வுக் கருவிகள்
October 28 , 2025 15 hrs 0 min 17 0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI), சீரொளிக் கற்றை வழியான முப்பரிமாண உணர்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட வலையமைப்பு ஆய்வு வாகனங்களை (NSVs) பயன்படுத்துகிறது.
இந்த வாகனங்கள் பள்ளங்கள், விரிசல்கள் மற்றும் மேற்பரப்புத் திட்டுகள் போன்ற சாலைக் குறைபாடுகளைத் தானாகவே ஆய்வு செய்து கண்டறியும்.
இந்தத் திட்டம் இந்தியாவின் 23 மாநிலங்களில் 20,933 கிலோமீட்டர் தேசிய நெடுஞ் சாலைகளில் பயன்பாட்டில் உள்ளது.
சேகரிக்கப்பட்ட தரவு ஆனது நிபுணர் பகுப்பாய்விற்காக NHAI ஆணையத்தின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டேட்டா லேக் இணைய தளத்தில் பதிவேற்றப் படும்.
இந்த முன்னெடுப்பு என்பது சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.