நெதர்லாந்தின் டிஜிட்டல் அடையாளத் திட்டத்தின் மீதான தீர்ப்பு
February 17 , 2020 2095 days 682 0
உலகில் இதுவரை எங்கும் நிகழாத வகையில், நெதர்லாந்தில் உள்ள ஒரு நீதிமன்றமானது டிஜிட்டல் அடையாள நெறிமுறைக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழிமுறை SyRI (கணினி இடர் காட்டி - System Risk Indicator) என அழைக்கப் படுகின்றது.
தரவுகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் (தரவு அந்தரங்கம்) மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தடுப்பதற்காகவும் இந்த தீர்ப்பானது வழங்கப் பட்டுள்ளது.
SyRI பற்றி
டச்சு சமூக நலத் துறை அமைச்சகமானது 2014 ஆம் ஆண்டில் SyRIயை உருவாக்கி உள்ளது.
SyRIயின் நோக்கமானது மோசடி செய்தவர்களை அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுவதிலிருந்து நீக்குதலாகும்.
அடையாள அட்டையின் பயன்பாடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஆதார் தீர்ப்பின் வரம்புகளைப் போலவே ஹேக் நீதிமன்றமும் சமூக நலனைத் தனிப்பட்ட தனியுரிமையுடன் சமநிலைப்படுத்த முயன்றுள்ளது.