நெதர்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு சிவப்புப் பாண்டா கரடிகள்
December 29 , 2024 216 days 246 0
கிறிஸ்துமஸ் அன்று நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் நகரில் இருந்து டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிற்கு (பத்மஜா நாயுடு இமாலய உயிரியல் பூங்கா) இரண்டு சிவப்புப் பாண்டாக் கரடிகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு வெளிநாட்டிலிருந்தும் சிவப்புப் பாண்டா கரடிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்படவில்லை.
இந்தியா இந்த இரண்டு செந்நிறப் பாண்டாக் கரடிகளுக்கும் விஷால் மற்றும் கோஷி என்று பெயரிட்டுள்ளது.
தற்போது, இந்த உயிரியல் பூங்காவில் 19 சிவப்புப் பாண்டா கரடிகள் (ஏழு ஆண், 12 பெண் மற்றும் இரண்டு குட்டிகள்) உள்ளன.
சிவப்புப் பாண்டா கரடிகள் (ஐலுரஸ் ஃபல்கென்ஸ்) கிழக்கு இமயமலை மற்றும் தென் மேற்கு சீனாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய பாலூட்டியாகும்.