நெருப்பு உருவாக்கத்திற்கான பழமையான அறியப்பட்ட சான்றுகள்
December 17 , 2025 23 days 63 0
சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் கிழக்கில் நிகழ்ந்த மனிதனால் உருவாக்கப் பட்ட தீ விபத்துக்கான ஆரம்பகால நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பார்ன்ஹாம் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு முன்னாள் களிமண் குழியாக இருந்த இந்த இடத்தில், சுமார் 415,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப் பட்ட ஓர் அடுப்பு உள்ளது.
அவர்கள் ஓர் அடுப்பை உருவாக்கும் ஒரு சுடப்பட்ட பூமி, வெப்பத்தால் உடைக்கப்பட்ட கைக்கோடரிகள் மற்றும் டிண்டரை ஒளிரச் செய்வதற்கு தீப்பொறிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை கல்லான இரண்டு பைரைட் துண்டுகள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.
இதுவரையில், வடக்குப் பிரான்சில் உள்ள ஒரு தளத்தில் மனிதர்கள் நெருப்பை உருவாக்கியதற்கான ஆரம்பகாலச் சான்றுகள் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னதானவையாகும் என்பதோடுஇது நியாண்டர்தால்களுடன் தொடர்புடையது.