TNPSC Thervupettagam

நெல் கொள்முதல் விதிமுறைகள்

November 24 , 2025 3 days 49 0
  • நெல் கொள்முதல் செய்வதற்கான அனுமதிக்கப்பட்ட ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பாதித்ததையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • அதிக ஈரப்பத வரம்பிற்கான தமிழக அரசின் இதே போன்ற முந்தைய கோரிக்கைகள் கடந்த காலங்களில் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
  • இந்தக் கோரிக்கைக்கு முன்னதாக அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசின் குழுக்கள் தமிழகத்திற்கு வருகை தந்து நெல் மாதிரிகளை சேகரித்தன.
  • கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு கோரியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்