1983 ஆம் ஆண்டு நெல்லி படுகொலை குறித்த திவாரி ஆணையத்தின் அறிக்கையை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய அசாம் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டினருக்கு எதிரான அசாம் கிளர்ச்சியின் போது 2,000க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் புலம்பெயர்ந்த முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப் பட்டனர்.
நீதிபதி திரிபுவன் பிரசாத் திவாரி தலைமையிலான ஆணையம் ஆனது 1984 ஆம் ஆண்டில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, ஆனால் அது ஒருபோதும் வெளிப்படுத்த / பகிரங்கப்படுத்தப்படவில்லை.
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அறிக்கையை தாக்கல் செய்வது வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் என்றும் அசாம் முதல்வர் கூறினார்.