நேட்டோ நாடுகளின் 2025 ஆம் ஆண்டு உச்சி மாநாடு ஆனது நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்றது.
நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், முக்கியப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 3.5% மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுடன் தொடர்புடையச் செலவுகளுக்கு சுமார் 1.5% ஆகியவற்றினை உள்ளடக்கியதாக அதன் பாதுகாப்புச் செலவினங்களை அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
அவற்றின் முன்னேற்றம் குறித்த மதிப்பாய்வுடன் சேர்த்து 2029 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, இந்த இலக்கை அடைவதற்கான அவற்றின் வருடாந்திரத் திட்டங்களை உறுப்பினர் நாடுகள் சமர்ப்பிக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டில், போலந்து, எஸ்டோனியா மற்றும் லாட்வியா மட்டுமே சுமார் 3 சதவீதத்திற்கும் அதிகமாகச் செலவிட்டன.
பாதுகாப்புத் துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.24% மட்டுமே செலவழித்த ஸ்பெயின், விதிமுறைகளுக்கு இணங்காததற்காக அமெரிக்க வர்த்தகத் தடைகளை எதிர்கொண்டது.
தற்போது, நேட்டோவில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன என்பதோடு இந்தியாவானது நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இடம் பெறவில்லை.