TNPSC Thervupettagam

நேத்ரா திட்டம்

September 28 , 2019 2137 days 1552 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது (Indian Space Research Organisation - ISRO) “நேத்ரா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • நேத்ரா (விண்வெளிப் பொருள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான அமைப்பு) என்பது இந்திய செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விண்வெளிக் கழிவுகள் மற்றும் பிற ஆபத்துக்களைக் கண்டறிவதற்காக விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முன்னெச்சரிக்கை அமைப்பாகும்.
  • இது விண்வெளியின் சூழ்நிலை விழிப்புணர்வில் (space situational awareness  - SSA) இந்தியாவுக்கு அதன் சொந்தத் திறனை வழங்குகின்றது.
  • நேத்ரா ஆனது 3,400 கி.மீ தொலைவு வரை, 10 செ.மீ என்ற சிறிய அளவிலான விண்வெளிக் கழிவுகளைக் கூட கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்கும். இதன் வரம்பெல்லையானது சுமார் 2,000 கி.மீ தூரமுள்ள விண்வெளிச் சுற்றுப்பாதைக்கு சமமாக இருக்கும்.
  • நேத்ரா பின்வருவனவற்றினால் ஆதரிக்கப்படுகின்றது
    • ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் அமைந்துள்ள பல்பொருள் கண்காணிப்பு ரேடார் (Multi-Object Tracking Radar - MOTR).
    • தமிழ்நாட்டில் உள்ள பொன்முடி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு ஆகிய இடங்களில் உள்ள தொலைநோக்கிகள்.
பாதுகாப்புப் பயன்பாடுகள்
  • பிற செயற்கைக் கோள்களின் சந்தேகத்திற்கிடமான சுற்றுவட்டப்பாதை மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களைப் புரிந்து கொள்ளவும் அவை தங்கள் விண்கலத்தை உளவு பார்க்கிறதா அல்லது தீங்கு செய்கிறதா என்பதை அறியவும் SSA உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்