நேர முத்திரையிடல் மற்றும் நேர ஒத்திசைவு வலைப்பின்னல்
May 3 , 2018 2730 days 1021 0
CSIR – NPL (தேசிய இயற்பியல் ஆய்வகம்) மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆகியவை தேசிய அளவிலான நேர முத்திரையிடல் நேர ஒத்திசைவு வலைப்பின்னலை (Time Stamping and Time Synchronization Network - TSTSN) நிறுவுவதற்கும், தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் UTC (Coordinated Universal Time) நேரத்திற்கு நேர சமிக்ஞையை கண்டறிதல் ஆகியவற்றிற்காக தொழில்நுட்ப அறிவை பரிமாற்றுதல் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்தல் என்பது ஒரு நிகழ்ச்சியின் நேர முத்திரையிடல் என குறிப்பிடப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைமுறைகளின் படி தொலைத் தொடர்புத்துறை நாடு முழுவதும் அமைக்கப்படும் நேர முத்திரையிடல் மற்றும் நேர ஒத்திசைவு வலைப்பின்னல் ஆனது CSIR – NPL -இன் (National Physical Laboratory) தொழில்நுட்ப உதவியோடு 22 நேர ஒத்திசைவு மையங்களைக் கொண்டிருக்கும்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கு இந்திய நேரத்தில் (IST) ஒத்திசைவு துடிப்பு அலைகளை (Synchronising Pulses) இந்த வலைப்பின்னல் வழங்கும்.
IST நேர முத்திரையுடன் தொலைத்தொடர்பு வலைப்பின்னலை ஒத்திசையச் செய்தலானது இணைய நிகழ்வுகளை தொடர்புபடுத்துதல் மற்றும் ஆராய்தல் ஆகியவற்றில் உள்ள கடினத் தன்மையை சரிசெய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை இயலச் செய்வதோடு இணைய நெறிமுறை வழியிலான குரல் தொடர்பு (Voice over Internet Protocol – VOIP) துண்டிப்பை குறைப்பதன் மூலம் தொலைத்தொடர்பு வலைப்பின்னல் திறனளவை மேம்படுத்தும்.
CSIR – NPL ஆனது இந்திய நேரத்தை (IST) உருவாக்கல், நிர்வகித்தல் மற்றும் பரவச் செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்புடைமையுடைய அமைப்பாகும்.