நைட்ரஜன் வாயு செலுத்தி மரணதண்டனை வழங்கல் – லூசியானா, அமெரிக்கா
March 24 , 2025 296 days 257 0
லூசியானா மாநில அரசானது முதல் முறையாக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ஒருவருக்கு மரணத் தண்டனையினை நிறைவேற்றியுள்ளது.
15 ஆண்டுகளில் இது அந்த அரசின் முதல் மரணதண்டனை ஆகும்.
இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்காவில் இரண்டாவது முறையாக இத்தகைய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வேண்டி, நைட்ரஜன் வாயு செலுத்துதல் முறையானது நான்கு முறையில் மட்டுமே (அனைத்தும் அலபாமாவில்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
லூசியானா அரசானது, கொடிய உயிர்க்கொல்லி மருந்துகளைப் பெறுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளது.
லூசியானாவில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் மரண தண்டனையினை பெற உள்ளனர்.
எதிர்கால மரண தண்டனைகளுக்காக என்று அந்த அரசானது, ஒரு சிறப்பு நைட்ரஜன் ஹைபோக்ஸியா வசதியை உருவாக்கியுள்ளது.
நைட்ரஜன் ஹைபோக்ஸியா என்பது ஒரு கைதிக்கு ஆக்ஸிஜன் வழங்கீடு நிறுத்தப் படுவதால் அவரது மரணத்திற்கு வழி வகுக்கும் வகையில் ஒரு மரண தண்டனையை நிறைவேற்றும் முறையாகும்.