நொடித்தல் மற்றும் திவால் குறியீடு (Insolvency and Bankruptcy Code - IBC) திருத்த மசோதா, 2020
March 14 , 2020 1993 days 744 0
இந்தத் திருத்தமானது திவாலான நிறுவனங்களை ஏலம் எடுத்த ஏலதாரர்களை குற்றவியல் நடவடிக்கைகளின் ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் முந்தைய பங்குதாரர்களிடமிருந்து குற்றவியல் நடவடிக்கைகள் எதிர்பார்க்கப் படலாம்.
இது அவற்றில் உள்ள தடைகளை நீக்கி, பெருநிறுவன நொடித்தல் தீர்வு காண் செயல்முறையை சீராக்க முயல்கின்றது.
முந்தைய உரிமையாளர்களின் தவறான செயல்களுக்காக வழக்குத் தொடரப்படுவதற்கு எதிராக கடனைத் திருப்பிச் செலுத்தும் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
IBC பற்றி
2016 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த IBC ஆனது ஏற்கனவே மூன்று முறை திருத்தப் பட்டுள்ளது.