தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையானது (TNSDA) கோயம்புத்தூர் வெள்ளலூரில் உள்ள நொய்யல் ஆற்றுப்படுகையிலிருந்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட தொல் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது; இது ஒரு பழங்கால குடியேற்றம் இருந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்துகிறது.
இந்த அகழ்வாராய்ச்சித் தளமானது, தமிழ்நாட்டில் உள்ள காவிரி ஆற்றுப் படுகையின் துணை நதி அமைப்பான நொய்யல் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
ரோமானிய செப்பு நாணயங்கள், மண் பாண்டங்கள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கல் அமைப்புகள், நீர் வழிப் பாதைகள், நெசவுக் கருவிகள் மற்றும் மணிகள், இரும்பு, எஃகு மற்றும் சங்கு ஆபரணங்கள் செய்ததற்கான சான்றுகள் ஆகியவை இக்கண்டுபிடிப்புகளில் அடங்கும்.
சில தொல்பொருட்கள் கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாகவும், சில பொருட்கள் சுமார் 2,100 ஆண்டுகள் பழமையானவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை வர்த்தக வழிகளை இணைக்கும் ஒரு பழங்கால வர்த்தக மையமாக வெள்ளலூர் இருந்ததை இந்த அகழ்வாராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது.