சான்றுறுதி அலுவலகம்/நோட்டரி சட்டம் 1952 மற்றும் நோட்டரி விதிகள் 1956 ஆகியவற்றின் கீழ் இயங்கலை வழிச் சேவைகளை வழங்குவதற்காக, அரசாங்கமானது நோட்டரி வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்த வலை தளமானது, மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட நோட்டரி அமைப்புகளை டிஜிட்டல் சார்ந்த சட்ட சேவைகளுக்காக இந்திய அரசாங்கத்துடன் இணைக்கிறது.
இது தகுதி சரிபார்ப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட பயிற்சிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் மற்றும் வருடாந்திர வருமான வரித் தாக்கல் செய்வதற்கும் உதவுகிறது.
2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த வலை தளம் மூலம் 34900க்கும் மேற்பட்ட டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட பயிற்சிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.