TNPSC Thervupettagam

நோயாளிப் பாதுகாப்பு உரிமைகள் சாசனம்

April 27 , 2024 20 days 74 0
  • சுகாதார நலனின் பின்னணியில் அனைத்து நோயாளிகளின் மிகப்பெரும் முக்கிய உரிமைகளையும் குறிப்பிட்டுக் காட்டும் முதல் நோயாளிப் பாதுகாப்பு உரிமைகள் சாசனத்தை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • நோயாளிகளின் குறைகள் கேட்கப் படுவதையும், அவர்களது பாதுகாப்பான சுகாதார நலனுக்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு உதவவும் இந்த சாசனம் முயல்கிறது.
  • நோயாளியின் பாதுகாப்பு என்பது சுகாதார நலனின் போது மக்களுக்கு ஏற்படும் எதிர் பாராத தீங்குகளைத் தவிர்ப்பதாகும்.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கருத்தின் படி, சுமார் 10 நோயாளிகளில் ஒருவர் சுகாதாரப் பாதுகாப்பில் பாதிக்கப்படுவதோடு, பாதுகாப்பற்ற சுகாதார நலச் சேவை காரணமாக ஆண்டுதோறும் 3 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகின்றன.
  • குறைந்த வருமானம் உள்ள நாடுகள் முதல் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், 100 பேரில் 4 பேர் பாதுகாப்பற்ற சுகாதார நலச் சேவையினால் உயிரிழக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்