நோய்த் தடுப்புச் செயல்பாட்டு நிரல்கள் 2030 (Immunisation Agenda – IA) என்ற ஒரு கருத்துருவானது உலக சுகாதார அமைப்பு, GAVI மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகியவற்றால் தொடங்கப் பட்டதாகும்.
தடுப்பூசிகளின் உயிர்காக்கும் விளைவினை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த IA 2030 என்ற நிரல் உலக நோய்த் தடுப்பு வாரத்தின் போது தொடங்கப்பட்டது.
கைக்குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்குத் தடுப்பூசிகள் அளிப்பதை 90% என்ற இலக்கு வரை எட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையை 2030 ஆம் ஆண்டுக்குள் பாதியளவாக குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.