ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனம், நோர்டிக் நாடுகளின் “கிளிங்கர் ரக படகுகளை” தனது பாரம்பரியப் பட்டியலில் சேர்த்துள்ளது.
மரத்தாலான பாய்மரப் படகான இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல கண்டங்கள் மற்றும் கடல்களுக்கிடையில், வட ஐரோப்பிய மக்கள் தங்களது தாக்கம், வர்த்தகம், மற்றும் சில நேரங்களில் போர் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரப்பிட வழி வகை செய்தன.
டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து யுனேஸ்கோவின் இந்த அங்கீகாரத்தைக் கோரின.