TNPSC Thervupettagam

நௌராதேஹி சரணாலயத்தில் சிவிங்கிப் புலிகள் மறு அறிமுகம்

November 4 , 2025 23 days 96 0
  • மத்தியப் பிரதேசத்தின் நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் ஆனது, குனோ தேசியப் பூங்கா மற்றும் காந்தி சாகர் சரணாலயத்திற்கு அடுத்தபடியாக, அந்த மாநிலத்தில் சிவிங்கிப் புலிகளுக்கான மூன்றாவது காப்பகமாக மாற உள்ளது.
  • நமீபியாவிலிருந்து பெறப்பட்ட சிவிங்கிப் புலிகள் நௌராதேஹியில் விடுவிக்கப் படும்.
  • குனோ மற்றும் காந்தி சாகரில் பதிவான புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொடர்ச்சியான மேலாண்மையைத் தொடர்ந்து நௌராதேஹி தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இந்த நடவடிக்கையானது அவற்றின் வாழ்விடங்களைப் பல்வகைப்படுத்தும், குனோ தேசியப் பூங்கா மீதான அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் சம்பல்-விந்தியன் நிலப் பரப்பில் ஒரு மாபெரும் எண்ணிக்கையை உருவாக்கும்.
  • நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் ஆனது 1,197 சதுர கி.மீ பரப்பளவில் பரவி உள்ள இந்தியாவின் மிகப்பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும்.
  • யமுனா மற்றும் நர்மதா நதிப் படுகைகளுக்கு நடுவே இந்தச் சரணாலயம் அமைந்து உள்ளது மற்றும் பாம்னேர், கோப்ரா மற்றும் பியர்மா போன்ற முக்கிய ஆறுகள் அதன் வழியாகப் பாய்கின்றன.
  • வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆசிய சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டன.
  • இந்திய அரசானது, நமீபியாவிலிருந்து ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப் படுத்துவதற்காக சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்டத்தினைத் தொடங்கி, குனோ தேசியப் பூங்காவிலும் (2022) பின்னர் காந்தி சாகர் சரணாலயத்திலும் (2024) சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்தியது.
  • தற்போது மூன்றாவது வளங்காப்புத் தளமாகச் செயல்படும் நௌராதேஹி மத்திய இந்தியாவில் இந்த இனங்களின் விரிவாக்கம், மரபணு பல்வகைப்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பை உறுதி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்