மத்திய ஆற்றல், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் R.K. சிங் மருசுதார் நதி வழியில் அமைந்த பகல் துல் நீர்மின் நிலையத்தின் ஒரு கிளை மின் நிலையத்தினைத் திறந்து வைத்தார்.
இந்த நிலையமானது ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பகல் துல் நீர்மின் நிலையமானது (Pakal Dul Hydro Electric Project) 2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற இலக்கைப் பூர்த்தி செய்வதில் உதவி புரியும்.
பகல் துல் நீர்மின் நிலையமானது 1000 MW திறனுடைய ஒரு திட்டமாகும்.
இது செனாப் பள்ளத்தாக்கு ஆற்றல் திட்டம் என்ற தனியார் நிறுவனத்தினால் கட்டமைக்கப் படுகிறது.