முதல்வர் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று, திருச்சியில் அன்புச் சோலை (அன்பின் தோட்டம்) எனப்படும் முதியோர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு மையங்களைத் தொடங்கி வைத்தார்.
இது முதியோர்களின், குறிப்பாக உழைக்கும் வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 25 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் உட்புற விளையாட்டுகள், உடலியக்க மருத்துவம், கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி, காலை உணவு மற்றும் மதிய உணவு போன்ற வசதிகளை வழங்கும்.
முதல் கட்டத்தில், 10 நகராட்சிகளில் தலா இரண்டு மையங்களும், சென்னை மாநகராட்சியில் சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.