TNPSC Thervupettagam

பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம்

April 30 , 2025 17 hrs 0 min 13 0

  • பகவத் கீதை மற்றும் பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை இந்த ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பதிவேட்டில் (MoW) புதிதாக சேர்க்கப்பட்ட 74 சேர்க்கைகளில் ஒரு பகுதி ஆகும்.
  • சமீபத்திய சேர்த்தல்களுடன், இப்பதிவேட்டில் தற்போது 570 உள்ளீடுகள் உள்ளன.
  • யுனெஸ்கோ அமைப்பானது, 1992 ஆம் ஆண்டில் Memory of the World (MoW) திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கையெழுத்துப் பிரதிகள், வாய்வழி மரபுகள், ஒலி-ஒளிப் பதிவுகள் மற்றும் நூலகம் மற்றும் ஆவணக் காப்பகப் பதிவுகள் போன்ற பல்வேறு ஆவணங்களின் தொகுப்பை உருவாக்குவது MoW திட்டத்தின் மையத் திட்டமாகும்.
  • இவை "உலக முக்கியத்துவம் மற்றும் மிகவும் மகத்தான உலகளாவிய மதிப்பைக் கொண்டவை".
  • 1997 ஆம் ஆண்டில் தொடங்கி, 2017 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு நீண்ட இடைவெளியைத் தவிர, இந்தப் பதிவேடு ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது.
  • 1948 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் பிரகடனப் படுத்தப் பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனம் ஆனது, இந்தப் பதிவேட்டில் சேர்க்கப்பட்ட புதியப் பதிவுகளில் ஒன்றாகும்.
  • கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை இதில் சேர்க்கப் பட்டதுடன், இந்தப் பதிவேட்டில் இந்தியாவிலிருந்து 14 உள்ளீடுகள் உள்ளன.
  • இதில் ரிக் வேதம் (2005 ஆம் ஆண்டு சேர்க்கப் பட்டது) மற்றும் சைவத் தத்துவஞானி அபினவ குப்தாவின் கூட்டுப் படைப்புகள் (2023 ஆம் ஆண்டு சேர்க்கப் பட்டது), 1961 ஆம் ஆண்டில் பெல்கிரேடில் அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாட்டின் பதிவுகள் (2023 ஆம் ஆண்டு சேர்க்கப் பட்டது) கிழக்கிந்திய டச்சு நாட்டு ஆவணக் காப்பகத்தின் பதிவுகள் (2003 ஆம் ஆண்டு சேர்க்கப் பட்டது)  ஆகியவை அடங்கும்.
  • அக்கடைசி இரண்டு உள்ளீடுகளானது, அல்ஜீரியா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா மற்றும் செர்பியா மற்றும் இந்தோனேசியா, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகியவற்றுடன் முறையே இந்தியாவும் அவர்களும் இணைந்து வழங்கிய கூட்டுச் சமர்ப்பிப்புகள் ஆகும்.

  • பகவத் கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது 18 அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்ட சுமார் 700 நடைகளைக் கொண்ட ஒரு சமஸ்கிருத வேத நூலாகும்.
  • அவை மகாபாரத காவியத்தின் ஆறாவது புத்தகத்தில் (பீஷ்ம பர்வம்) பதிக்கப் பட்டு உள்ளன.
  • இது கிமு 2 அல்லது 1 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாகக் கருதப்படுகிறது.
  • நாட்டிய சாஸ்திரம் ஆனது 36,000 நடைகளைக் கொண்ட நாடகம் (நாட்டியம்), நடிப்பு (அபிநயம்), அழகியல் உணர்வு வெளிப்பாடு (ரசம்), உணர்வு (பாவம்) மற்றும் இசை (சங்கீதம்) ஆகியவற்றை கையாள்கிறது.
  • இது சமஸ்கிருத மொழியில் பரதமுனியால் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
  • கீதையானது அடிப்படையில், மகாபாரதப் போரின் தொடக்கத்திற்கு சற்று முன்னதாக அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்