TNPSC Thervupettagam

பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் இரண்டாவது குறுகிய காலச் செயல் திறன் சோதனை

July 19 , 2025 3 days 37 0
  • மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் (IPRC) பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் குறுகிய காலச் செயல் திறன் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இந்த சோதனையில், உண்மையான இயக்க சூழல்களின் கீழ் அதன் தீப்பற்றல் மற்றும் செயல்திறனைச் சரிபார்க்க வேண்டி உண்மையான எரிபொருளைப் பயன்படுத்தி இயந்திரத்தை குறுகிய காலத்திற்கு இயக்கும் செயல்முறை அடங்கும்.
  • இந்தச் சோதனையானது உந்துதல் கலத்தினைத் தவிர மற்ற அனைத்து இயந்திர அமைப்புகளையும் உள்ளடக்கிய முக்கியக் கூறு சோதனை ஆகும்.
  • உந்துதல் கலம் அந்து 3.5 வினாடிகள் காலத்திற்கு வேண்டி செயல் திறன் சோதனைக்கு உட்படுத்தப் பட்டது.
  • இது இயந்திரத்தின் தொடக்க இயக்க நிலையை உறுதிப்படுத்தியது.
  • சோதனையின் போது, இயந்திரம் வெற்றிகரமாகத் தீப்பற்றப்பட்டு அதன் மதிப்பிடப் பட்ட ஆற்றல் மட்டத்தில் 60% வரை இயக்கப்பட்டது என்பதோடு இது அதன் நிலையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்திறனைக் காட்டுகிறது.
  • பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரம் என்பது திரவ ஏவுகல இயந்திரம் ஆகும் என்பதோடு இது திரவ ஆக்ஸிஜனை (LOX) ஆக்ஸிஜனேற்றியாகவும், சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெயை (RP-1) எரிபொருளாகவும் பயன்படுத்துகிறது.
  • எதிர்கால கனரக கலங்களை சுமந்து செல்லும் ஏவு வாகனங்களின் கூடுதல் உந்துதல் நிலைகளுக்கு ஆற்றல் அளிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் LOX-மண்ணெண்ணெய் கலவை மீக்குளிர் நிலையிலான அமைப்புகளை விட மிகவும் அதிகளவிலான உந்து விசையை வழங்குவதால், அது உந்துவிசை செயல்திறனை மேம்படுத்துகிறது.
  • கூடுதலாக, மண்ணெண்ணெய் அந்து திரவ ஹைட்ரஜனை விட மலிவானது மற்றும் கையாள எளிதானது, செலவு குறைந்தது மற்றும் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.
  • இது இஸ்ரோவின் கலன் உள்ளடக்கத் திறனை நன்கு அதிகரிக்கும் மற்றும் அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான ஏவு வாகனம் (NGLV) போன்ற எதிர்கால ஏவு வாகனங்களை ஆதரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்