TNPSC Thervupettagam

பகுரும்பா துவோ 2026

January 27 , 2026 10 hrs 0 min 45 0
  • பிரதமர் அசாமின் கௌஹாத்தியில் நடைபெற்ற பகுரும்பா துவோ 2026 கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • பகுரும்பா துவோ என்பது போடோ சமூகத்தின் பாரம்பரிய பகுரும்பா நடனத்தின் ஒரு மாபெரும் கலாச்சார நிகழ்ச்சியாகும்.
  • அசைவுகள் அழகாகவும், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள், இலைகள் மற்றும் பூக்களின் அசைவுகளால் ஈர்க்கப்பட்டதாகவும் இருப்பதால் இது "வண்ணத்துப்பூச்சி நடனம்" என்று அழைக்கப்படுகிறது.
  • வண்ணமயமான கையால் நெய்யப்பட்ட டோக்னா, ஜ்வம்க்ரா (ஃபாஸ்ரா) மற்றும் அரோனை ஆகியவற்றை அணிந்து போடோ பெண்கள் இந்த நடனத்தினை குழுக்களாக நிகழ்த்துகின்றனர்.
  • இந்த நடனத்துடன் ஆண் இசைக்கலைஞர்கள் சிஃபுங் (மூங்கில் புல்லாங்குழல்), காம் (டிரம்), செர்ஜா மற்றும் தர்கா போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள்.
  • 2026 ஆம் ஆண்டில், 10,000க்கும் மேற்பட்ட போடோ கலைஞர்கள் ஒன்றாக இணைந்து இந்த நடனத்தினை நிகழ்த்தினர் என்ற நிலையில் இது அமைதி, கருவுறுதல், மகிழ்ச்சி மற்றும் கூட்டு நல்லிணக்கத்தைக் குறிக்கும் மற்றும் பிவிசாகு (போடோ புத்தாண்டு) போன்ற பண்டிகைகளுடன் இணைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்