மும்பையில் பல நூற்றாண்டு பழமையான பக்டி முறையை அகற்ற மகாராஷ்டிரா ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய பக்டி அமைப்பு, குத்தகைதாரர்கள் மிகக் குறைந்த வாடகையில் நீண்ட காலம் நிரந்தரமான குடியிருப்பிற்கு ஒரு முறையிலான தவணையை செலுத்த அனுமதித்தது.
காலப்போக்கில், இந்த அமைப்பு கட்டிடச் சீரழிவை ஏற்படுத்தியதோடு, மறுமேம்பாடு தடைபட்டது மற்றும் சட்ட மோதல்களுக்கு வழிவகுத்தது.
இந்தப் புதிய கட்டமைப்பானது மறுமேம்பாடு செய்யப்பட்ட சொத்துக்களில் குத்தகை தாரர்களுக்கு தெளிவான உரிமைகள் அல்லது உரிமைப் பங்குகளை வழங்குகிறது.
திட்டங்களை சாத்தியமானதாக மாற்ற நில உரிமையாளர்கள் நியாயமான இழப்பீடு, திருத்தப்பட்ட வாடகைகள் மற்றும் மறுமேம்பாட்டுச் சலுகைகளைப் பெறலாம்.
வழக்குகளைக் குறைத்தல், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருதல் மற்றும் பல காலமான பக்டி கட்டிடங்களின் மறு மேம்பாட்டை மிக விரைவுபடுத்தச் செய்தல் ஆகியவற்றை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.