பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து தாக்காவிலுள்ள பங்கபந்து சர்வதேச சமூக மையத்தில் “பங்கபந்து பாபு” என்ற ஒரு அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தனர்.
இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மற்றும் வங்க தேசத்தின் தந்தையான “பங்கபந்து” ஷேக் முஜிபூர் ரஹூமான் ஆகியோர் பற்றிய டிஜிட்டல் கண்காட்சியையும் கொண்டுள்ளது.
இந்த அருங்காட்சியகமானது காந்தி மற்றும் பங்கபந்துவின் வாழ்க்கை வரலாற்றிற்கு என்று அர்ப்பணிக்கப் பட்டதாகும்.