பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் உள்ள இடைவெளி பற்றிய அறிக்கை 2023
March 21 , 2023 1000 days 517 0
"2023 ஆம் ஆண்டு பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் உள்ள இடைவெளி பற்றிய அறிக்கை: உலக நாடுகளின் பசி நெருக்கடியை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை தேவை" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது பசி நிலைக்கு எதிரான நடவடிக்கை (Action Against Hunger) என்ற ஒரு அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையின்படி, கடுமையான பசி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவான அளவில் பசி நெருக்கடிகளைக் கொண்ட நாடுகளை விட குறைவான நிதியையே பெற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டில் பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் 53% அளவில் இடைவெளி இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டது.
பசி நிலையைப் போக்குவதற்கான திட்டங்களின் தேவைகளில் 3 சதவீதம் மட்டுமே முழுமையாக நிதியளிக்கப்பட்டது.
கூடுதல் நிதிக்கான 65 சதவீத வேண்டுகோள்களில் பாதியளவு கூட நிறைவேற்றப் படவில்லை.
உலக நாடுகளின் பசி நிலையினைப் போக்குவதற்கான நடவடிக்கைகளின் தேவைகளில் 47% ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் நிதி மூலம் பூர்த்தி செய்யப் படுகிறது.
எனவே, பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் உள்ள இடைவெளி ஆனது 53% ஆக உள்ளது.
2021 ஆம் ஆண்டில் 828 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட 46 மில்லியனும், 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 150 மில்லியனும் அதிகமாகும்.
உலக நாடுகளில் உள்ள பசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது.
மொசாம்பிக் மற்றும் கென்யா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹைதி ஆகிய நாடுகளை விட 32% அதிக நிதியைப் பெற்றுள்ளன.