TNPSC Thervupettagam

பசிபிக் தீவுகளுக்கான கடனுதவி

October 4 , 2019 2131 days 783 0
  • பசிபிக் தீவு நாடுகளின் குழுவிற்கு 150 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
  • அந்த நாடுகளின் தேவைகளுக்கேற்ப சூரிய ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் காலநிலை தொடர்பானத் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிதியானது  பயன்படுத்தப்படும்.
  • ஐ.நா பொதுச் சபையின் 74வது அமர்வின்போது நடைபெற்ற இந்தியா-பசிபிக் தீவுகளில் உள்ள வளரும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்தக் கடனுதவி குறித்து அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் மூலம் பயனடையும் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த நாடுகள் பின்வருமாறு:

கிரிபாட்டி குடியரசு

பலாவு

பிஜி

மார்ஷல் தீவுகள்

வனாட்டு குடியரசு

மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள்

நவூரு குடியரசு

தொங்கா அரசு

துவாலு

பப்புவா நியூ கினியா

சமோவா

சாலமன் தீவுகள்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்