TNPSC Thervupettagam

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ

October 17 , 2026 5 days 86 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்றச் சேவையானது, பசிபிக் பெருங்கடலின் நினோ 3.4 பிராந்தியத்தில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29.70°C ஐ எட்டியதாகப் பதிவு செய்துள்ளது.
  • இந்த வெப்பநிலையானது 1982-83, 1997-98 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வலுவான எல் நினோ நிகழ்வுகளின் போது பதிவான உச்ச அளவுகளைத் தாண்டியது.
  • எல் நினோ என்பது ஒரு இயற்கையான பருவநிலை வடிவமாகும், இது மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலை வெப்பமாக்கி, உலகளாவிய மழைப் பொழிவு மற்றும் வானிலை அமைப்புகளை மாற்றுகிறது.
  • இது வறட்சி, வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் பயிர் இழப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை செப்டம்பர் மாதத்தில் 21.05°C என்ற உச்சத்தை எட்டியது, அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமானது உலகில் இதுவரை பதிவான இரண்டாவது வெப்பமான செப்டம்பர் மாதமாகும்.
  • தற்போதைய எல் நினோ விதிவிலக்காக வலுவானது, ஆனால் இதுவரை பதிவு செய்யப் பட்டவற்றிலேயே மிக வலிமையானது என்று இன்னும் உறுதிப்படுத்தப் பட வில்லை என கோப்பர்நிக்கஸ் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்