TNPSC Thervupettagam

பசுமை அம்மோனியா மற்றும் பசுமை மெத்தனால் தரநிலைகள்

March 11 , 2026 14 hrs 0 min 19 0
  • பசுமை ஹைட்ரஜன் வழிப்பொருட்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் பசுமை அம்மோனியா மற்றும் பசுமை மெத்தனால் தரநிலைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • அம்மோனியா மற்றும் மெத்தனாலை "பசுமை" எரிபொருட்களாக வகைப்படுத்துவதற்கான தகுதி நிபந்தனைகள் மற்றும் உமிழ்வு வரம்புகளை வரையறுக்க புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்தத் தர நிலைகளை வெளியிட்டுள்ளது.
  • பசுமை அம்மோனியா தரநிலை என்பது ஒரு கிலோ அம்மோனியாவிற்கு 0.38 கிலோ கார்பன் டை ஆக்சைடுக்கு (CO) மிகாமல் உயிரியல் சாரா பசுமை இல்ல வாயு உமிழ்வு இருக்க வேண்டும்.
  • பசுமை மெத்தனால் தரநிலை என்பது ஒரு கிலோ மெத்தனாலுக்கு 0.44 கிலோ கார்பன் டை ஆக்சைடுக்கு (CO) மிகாமல் உயிரியல் சாரா பசுமை இல்ல வாயு உமிழ்வு இருக்க வேண்டும்.
  • பசுமை மெத்தனால் உற்பத்திக்கான கார்பன் டை ஆக்சைடு உயிரியல் மூலங்கள், நேரடி காற்று பிடிப்பு அல்லது ஏற்கனவே உள்ள தொழில்முறை மூலங்களிலிருந்து பெறப் படலாம் மற்றும் இதற்கான அளவீடு, கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான விரிவான விதிகள் தனியாக வெளியிடப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்