இந்திய அரசானது பசுமை இழுவைப் படகுப் பரிமாற்றத் திட்டத்தினைத் தொடங்கச் செய்வதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள், இந்திய நாட்டினை ‘உலகளாவியப் பசுமை முறை கப்பல் உற்பத்தி மையமாக’ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்தத் திட்டமானது பசுமைக் கலப்பின இழுவைப் படகுகள் அறிமுகப்படுத்துவதன் மூலம் தொடங்கப் பட உள்ளது.
இது பசுமைக் கலப்பின உந்துவிசை அமைப்புகளால் இயக்கப் படுவதோடு, மேலும், மெத்தனால், அம்மோனியா, ஹைட்ரஜன் போன்ற புதைபடிவம் சாரா எரிபொருள் தீர்வுகள் மூலங்களை ஏற்கும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது.
பசுமைத் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் முதல் தேசியச் சிறப்பு மையமானது ஹரியானாவின் குருகிராம் நகரில் திறக்கப் பட்டுள்ளது.