TNPSC Thervupettagam

பசுமை எரிசக்தித் துறையில் முன்னணித்துவம்

July 29 , 2025 10 hrs 0 min 8 0
  • 2024 ஆம் ஆண்டில் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகமான காற்றாலை விசையாழிகள் மற்றும் சூரிய மின்கலங்களை சீனா நிறுவியது.
  • சீனாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் புரட்சி பல தசாப்த கால மூலோபாய அரசுத் திட்டமிடல் மற்றும் புதுமைகளில் அதிகப்படியான முதலீடுகளின் விளைவாகும்.
  • சீனாவின் பசுமைப் புரட்சி ஆனது எரிசக்திப் பாதுகாப்பின்மை பற்றிய கவலைகளுடன் மிக அதிக அளவிலான காற்று மாசுபாட்டின் பெருகிவரும் நெருக்கடியினால் மேற்கொள்ளப்பட்டது.
  • மேலும், வெளிநாட்டு எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வருவது எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டியது.
  • சீனாவின் எண்ணெய் இறக்குமதிகள் பெரும்பாலும் மேற்கு ஆசியா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடல் வழியான கப்பல் பாதைகளைச் சார்ந்துள்ளது.
  • 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சோதனைத் திட்டங்களுடன் தொடங்கி, சீனா தற்போது சூரிய சக்தி மின் உற்பத்தி தகடுகள் மற்றும் மின் கல உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் மட்டும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு சீனா குறிப்பிடத்தக்க அளவில் 940 பில்லியன் டாலரை ஒதுக்கியது.
  • இது 2006 ஆம் ஆண்டில் 10.7 பில்லியன் டாலர் என்ற ஆரம்ப கால முதலீட்டிலிருந்து தொடங்கியது.
  • இதனுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை 2024-25 ஆம் ஆண்டில் மொத்தமாக 3.4 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றது.
  • இது இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகப்படியான இடைவெளியை எடுத்துக் காட்டுகிறது.
  • எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றத்தின் தகவலின் படி இந்தத் தகவல் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்