TNPSC Thervupettagam

பசுமை தீபாவளி பிரச்சாரம் 2026

October 22 , 2026 14 hrs 0 min 19 0
  • WWF-இந்தியா EIACP திட்ட மையத்தின் நாடு தழுவிய பசுமை தீபாவளி பிரச்சாரம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தொடங்கி 2026 ஆம் ஆண்டு நவம்பர் 8 வரை நடைபெறுகிறது.
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) ஆதரவுடன் நடைபெறும் இப்பிரச்சாரம், குறைந்த அளவிலான மாசு மற்றும் கழிவுகளுடன் தீபாவளியைக் கொண்டாட மக்களை ஊக்குவிக்கிறது.
  • தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் (NCAP) கீழ் உள்ள 130 நகரங்களில் இது குறிப்பாக கவனம் செலுத்துகிறது.
  • பட்டாசுகள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளைத் தவிர்ப்பது, பாரம்பரிய விளக்குகள் (தியாக்கள்) மற்றும் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகளைப் பயன்படுத்துவது, கழிவுகளைத் தரம் பிரிப்பது மற்றும் உள்ளூர் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றை இப்பிரச்சாரம் ஊக்குவிக்கிறது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் மிஷன் லைஃப் (Mission LiFE - சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை) திட்டத்துடன் இது ஒத்துப்போகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்