வன ஆலோசனைக் குழுவானது (Forest Advisory Committee - FAC) இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது “காடுகளை” ஒரு பொருளாக வர்த்தகம் செய்ய அனுமதிக்கின்றது.
இது தனது (வனத் துறை) பொறுப்புகளில் ஒன்றான காடுகளை ஏற்படுத்தும் பணியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்க வனத் துறையை அனுமதிக்கின்றது.
FAC என்பது வணிக நோக்கங்களுக்காக வன நிலங்களை அழிப்பதற்கு தொழில் துறையினால் வைக்கப்படும் கோரிக்கைகளை தீர்ப்பதற்கான ஒரு தலைமை அமைப்பாகும்.
இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டில், பொது - தனியார் பங்களிப்புடன் சீரழிந்த வன நிலங்களுக்காக ‘பசுமை நன்மதிப்புத் திட்டமானது’ பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தில் இருக்கும் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சரால் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வில்லை.