பசுமை நற்செயல்கள் பிரச்சாரம் – சுற்றுச்சூழல் அமைச்சகம்
February 5 , 2018 2707 days 1030 0
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகமானது பசுமை நற்செயல்கள் (Green Good Deeds Campaign) என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
உலக வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பொதுமக்கள் சார்ந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுப்புறத்தை அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதும், அவர்களுக்காக சுற்றுப்புறத்தை பாதுகாப்பதும் இந்த பிரச்சாரத்தின் நோக்கங்களாகும்.