TNPSC Thervupettagam

பசுமை மதிப்பீடு திட்டத்தின் கீழ் நிலங்கள் மறுசீரமைப்பு

May 5 , 2024 14 days 92 0
  • தமிழ்நாட்டில் மொத்தம் 263.4 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 13 தரமிழந்த நிலங்கள் பசுமை மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது.
  • இந்தத் திட்டமானது ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது தனிநபர்கள், சமூகங்கள், தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்களால் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் தன்னார்வ ரீதியின் அடிப்படையிலான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சந்தை அடிப்படையிலான நெறிமுறையாகும்.
  • பங்குதாரர்கள் தரமிழந்த நிலங்களை மறுசீரமைப்பதில் முதலீடு செய்வர், அதற்குப் பதிலாக, வன நிலத்தை வனம் அல்லாதப் பயன்பாட்டு நோக்கங்களுக்காக மாற்றும் நடவடிக்கைகளின் போது இழப்பீட்டு காடு வளர்ப்புக்குப் பயன்படுத்தக்கூடிய வகையிலான பசுமை மதிப்பீடுகளைப் பெறுவர்.
  • 2,448.57 ஹெக்டேர் பரப்பளவிலான 101 நிலப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, பசுமை மதிப்பீட்டுப் பதிவேட்டிற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
  • அதில் 13 (263.46 ஹெக்டேர்) பகுதிகள் அங்கீகரிக்கப் பட்டதோடு, 19 (150.84) பகுதிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
  • இந்த அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் திருவள்ளூர், சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்