TNPSC Thervupettagam

பசுமை வரவுத் திட்டம்

September 7 , 2025 4 days 33 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று பசுமை வரவுத் திட்ட முறையை திருத்தியமைத்தது.
  • மரம் வளர்ப்பதற்கான பசுமை வரவுகள் ஆனது தற்போது ஐந்து ஆண்டுகள் மறு சீரமைப்புப் பணிகள் மற்றும் குறைந்தபட்சம் 40 சதவீத அடர்த்தியை அடைந்த பின்னரே வழங்கப்படும்.
  • மீட்டெடுக்கப்பட்ட வன நிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வளரும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பசுமை வரவு வழங்கப்படும்.
  • இந்தப் புதிய விதிகள் ஆனது, நடப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடனடி வரவுகளை அனுமதித்த 2024 ஆம் ஆண்டு அறிவிப்பை மாற்றுகின்றன.
  • பசுமை வரவுகள் ஆனது தற்போது வர்த்தகம் செய்ய முடியாதவை மற்றும் வரவினைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு இடையேயான மாற்றங்கள் தவிர, மற்றவை இடையே மாற்ற முடியாதவையாக மாற்றப்பட்டுள்ளன.
  • புதிய அமைப்பின் கீழ் பசுமை வரவுகள் வழங்கப்படுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சரிபார்ப்பு மற்றும் உரிமை கோரல் அறிக்கையைப் பெறுதல் கட்டாயமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்