TNPSC Thervupettagam

பசுமை விமான நிலையங்கள் அங்கீகாரம்

June 14 , 2021 1491 days 840 0
  • GMR ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு சர்வதேச விமான நிலையங்கள் மன்றத்தினுடைய (Airports Council International – ACI) 2021 ஆம் ஆண்டிற்கான பசுமை விமான நிலையங்கள் எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விமான நிலையங்கள் மேற்கொண்ட நிலையான சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளுக்காக இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளது.
  • டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 25 பில்லியன் பயணிகளுக்கு மேல் எனும்பிரிவில் பிளாட்டின அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • ஹைதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 25 மில்லியன் பயணிகளுக்கு கீழ்எனும் பிரிவில் தங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் நோக்கம்,
    • வான்வழிப் போக்குவரத்தினால் சுற்றுச்சூழல் மீது ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காக வேண்டி சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறப்பான நடைமுறைகளை மேம்படுத்துவது,
    • சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் சிறப்பாக செயலாற்றிய விமான நிலையப் பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றவையாகும்.
  • ACI அமைப்பின் 2021 ஆம் ஆண்டு பசுமை விமான நிலையங்கள் அங்கீகாரத் திட்டத்தின் கருத்துரு, ‘காற்றுத் தர மேலாண்மை’  (Air Quality Management) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்