பசுமைக் கடன் வழங்கீட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல்
April 19 , 2024 478 days 480 0
மத்தியப் பிரதேசமானது மத்திய அரசின் பசுமைக் கடன் வழங்கீட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் 10 மாநிலங்களில் 4,980 ஹெக்டேர் பரப்பளவில் 500க்கும் மேற்பட்ட நிலப் பகுதிகளில் மரங்களை நடுவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாநிலங்கள் மற்ற மூன்று மாநிலங்களுடன் சேர்ந்து, இந்தத் திட்டத்திற்காக 10,000 ஹெக்டேர் பரப்பிலான நிலப் பகுதியினை அடையாளம் கண்டுள்ளன.
மத்தியப் பிரதேசமானது, இதுவரையில், தோட்டமாக்குதல்/பசுமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக என்று அங்கீகரிக்கப்பட்ட 954 ஹெக்டேர் வளமிழந்த வன நிலத்தினைப் பதிவு செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தெலங்கானா (845 ஹெக்டேர்), சத்தீஸ்கர் (713 ஹெக்டேர்), குஜராத் (595 ஹெக்டேர்) மற்றும் அசாம் (454 ஹெக்டேர்) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.