பசுமைப் பட்டாசுகளின் (சுற்றுச்சூழலுக்கு உகந்த) உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
December 6 , 2019 2087 days 677 0
‘பசுமைப்’ பட்டாசுகளின் வணிக ரீதியிலான உற்பத்திக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் பசுமைப் பட்டாசுகள் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்(Council of Scientific and Industrial Research - CSIR) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய ரசாயன கலவைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தக் கலவை விதிகளை உறுதிப்படுத்துவதற்காக பட்டாசு உற்பத்தியாளர்கள் "சோதனை அலகு" ஒன்றை அமைக்க வேண்டும். இது பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் கண்காணிக்கப்பட இருக்கின்றது.
பசுமைப் பட்டாசுகளானது மாசுபாடுகளை 30% வரை குறைக்கும் திறன் கொண்டது.