பல தசாப்தங்களாக உலகளாவிய வளங்காப்பு முயற்சிகளுக்குப் பிறகு IUCN அமைப்பானது பச்சைக் கடல் ஆமை/தோணியாமைகளின் (செலோனியா மைடாஸ்) வளங்காப்பு நிலையை அருகி வரும் இனம் என்ற நிலையில் இருந்து தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்ற நிலைக்கு மேம்படுத்தியுள்ளது.
சில துணை இனங்களுக்குத் தொடர்ந்து பல அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து உலகளாவிய பச்சை ஆமைகளின் எண்ணிக்கை கிட்டத் தட்ட 28% அதிகரித்துள்ளது.
கூடு கட்டும் பெண் விலங்குகள் மற்றும் அவற்றின் முட்டைகளைப் பாதுகாத்தல், மீன் பிடி சாதனங்களில் ஆமை விலக்கு சாதனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நீடித்த வர்த்தகத்தைக் குறைத்தல் ஆகியவை வளங்காப்பின் வெற்றிகளில் அடங்கும்.
சில துணை இனங்கள் ஆனது வணிகத்திற்கு முந்தைய நிலைகளை நெருங்கி வருவதுடன் பிரேசில், மெக்ஸிகோ மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான மீட்பு நிலைகள் பதிவாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள ரெய்ன் தீவு உட்பட தென்மேற்கு பசிபிக் பகுதியின் துணை இனங்களில், சமீபத்திய ஆண்டுகளில் குஞ்சு பொரிக்கும் இனங்களின் உற்பத்தி குறைந்து வருவதைக் காட்டுகிறது.