TNPSC Thervupettagam

பஞ்சாப் - புதிய புனித நூல்கள் அவமதிப்பிற்கு எதிரான மசோதா

July 20 , 2025 4 days 32 0
  • பஞ்சாப் அரசு ஆனது, 2025 ஆம் ஆண்டு புனித நூல்களை மதிக்காமை மற்றும் அவற்றிற்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் மசோதாவினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க புனித நூல்களுக்கு எதிரான அவமதிப்புகளை இந்த மசோதா குற்றமாக்குகிறது.
  • இது ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப், ஸ்ரீமத் பகவத் கீதை, குர்ஆன் ஷெரீஃப் மற்றும் புனித வேதாகமம் உள்ளிட்ட பல நூல்களுடன் தொடர்புடைய பல்வேறு புனித நூல்களை உள்ளடக்கியது.
  • இந்த மசோதாவானது, இந்தக் குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனையும் மற்றும் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கிறது.
  • புனிதப் படைப்புகளை அவமதிக்க முயற்சிப்பதற்கு என 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • அத்தகைய நடவடிக்கைக்கு தூண்டுதலாக இருத்தலும் தண்டனைக்குரியது.
  • பஞ்சாப் அரசு இந்த மசோதாவை வரைவதற்கு முன்பு மத்திய சட்ட அமைச்சகத்திடம் இது பற்றி கலந்தாலோசிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்