பஞ்சாப் - புதிய புனித நூல்கள் அவமதிப்பிற்கு எதிரான மசோதா
July 20 , 2025 124 days 142 0
பஞ்சாப் அரசு ஆனது, 2025 ஆம் ஆண்டு புனித நூல்களை மதிக்காமை மற்றும் அவற்றிற்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் மசோதாவினை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க புனித நூல்களுக்கு எதிரான அவமதிப்புகளை இந்த மசோதா குற்றமாக்குகிறது.
இது ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப், ஸ்ரீமத் பகவத் கீதை, குர்ஆன் ஷெரீஃப் மற்றும் புனித வேதாகமம் உள்ளிட்ட பல நூல்களுடன் தொடர்புடைய பல்வேறு புனித நூல்களை உள்ளடக்கியது.
இந்த மசோதாவானது, இந்தக் குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனையும் மற்றும் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கிறது.
புனிதப் படைப்புகளை அவமதிக்க முயற்சிப்பதற்கு என 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அத்தகைய நடவடிக்கைக்கு தூண்டுதலாக இருத்தலும் தண்டனைக்குரியது.
பஞ்சாப் அரசு இந்த மசோதாவை வரைவதற்கு முன்பு மத்திய சட்ட அமைச்சகத்திடம் இது பற்றி கலந்தாலோசிக்கவில்லை.