பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வான்வழி ஆய்வு
September 12 , 2025 63 days 102 0
பிரதமர் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்தார்.
சேதத்தை மதிப்பிடுவதற்காக இரு மாநில அரசுகளுடனும் அவர் மறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி நிதி உதவித் தொகுதிகளை அறிவித்தார்.
இமாச்சலப் பிரதேசத்திற்கு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 1,500 கோடி ரூபாய், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய், கருணைத் தொகை மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் பஞ்சாப் மாநிலத்தில், ஏற்கனவே மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாய்க்கு மேலாக 1,600 கோடி ரூபாய் கூடுதல் உதவியை அறிவித்தார்.
பஞ்சாபிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதி மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் இரண்டாவது தவணையை முன்கூட்டியே விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.
பஞ்சாபில், 2,097க்கும் மேற்பட்ட கிராமங்களும் 3.88 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பரவலான பயிர் மற்றும் கால்நடை இழப்பு ஏற்பட்டுள்ளது.