TNPSC Thervupettagam

பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வான்வழி ஆய்வு

September 12 , 2025 10 days 51 0
  • பிரதமர் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்தார்.
  • சேதத்தை மதிப்பிடுவதற்காக இரு மாநில அரசுகளுடனும் அவர் மறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி நிதி உதவித் தொகுதிகளை அறிவித்தார்.
  • இமாச்சலப் பிரதேசத்திற்கு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 1,500 கோடி ரூபாய், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய், கருணைத் தொகை மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் அறிவிக்கப்பட்டது.
  • பிரதமர் பஞ்சாப் மாநிலத்தில், ஏற்கனவே மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாய்க்கு மேலாக 1,600 கோடி ரூபாய் கூடுதல் உதவியை அறிவித்தார்.
  • பஞ்சாபிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதி மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் இரண்டாவது தவணையை முன்கூட்டியே விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.
  • பஞ்சாபில், 2,097க்கும் மேற்பட்ட கிராமங்களும் 3.88 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பரவலான பயிர் மற்றும் கால்நடை இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்