பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளை விரிவுப்படுத்தும்) சட்டம் – சத்தீஸ்கர்
November 26 , 2021 1384 days 1375 0
சத்தீஸ்கர் அரசானது 1996 ஆம் ஆண்டு பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்டப் பகுதிகளை விரிவுபடுத்தும்) சட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் பஞ்சாயத்து விதிமுறைகள் (பட்டியலிடப்பட்டப் பகுதிகளை விரிவுபடுத்துதல்) விதிகள் என்ற வரைவு விதிகளை உருவாக்கியுள்ளது.
PESA சட்டத்தின் விரிவாக்கம் Panchayat (Extension of the Scheduled Areas) Act, 1996 என்பது ஆகும்.
பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிராம சபைகள் மூலம் சுய நிர்வாகத்தை (தன்னாட்சியை) உறுதி செய்வதற்காக மத்திய அரசினால் இந்த சட்டமானது இயற்றப்பட்டது.
இந்தச் சட்டமானது பழங்குடியினச் சமூகத்தினர் மற்றும் பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது சொந்த தன்னாட்சி அரசு முறைகள் மூலம் அவர்களை நிர்வகிப்பதற்கு சட்ட ரீதியில் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கிறது.
இயற்கை வளங்கள் மீது பழங்குடியினர் பாரம்பரியமாகக் கொண்டுள்ள சிலபல உரிமைகளையும் இது அங்கீகரிக்கிறது.
இந்த விதிகள் நிறைவேற்றப்பட்டால் PESA சட்டங்களைக் கொண்ட 7வது மாநிலமாக சத்தீஸ்கர் மாறும்.
PESA சட்டங்களை ஆறு மாநிலங்கள் (இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் , மகாராஷ்டிரா) நிறைவேற்றி இருக்கின்றன.