படத்ரவா தான் மறுசீரமைப்புத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
படத்ரவா தான் ஆனது, அசாமில் உள்ள மிக முக்கியமான மதத் தலங்களில் ஒன்றாகும், என்பதோடுஇது சங்கரதேவாவின் பிறப்பிடமாக உள்ளார்ந்தக் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது.
சங்கர்தேவா (1449–1568) ஒரு புகழ்பெற்ற சீர்திருத்தவாதி, கவிஞர் மற்றும் சமூகச் சிந்தனையாளர் ஆவார்.
'ஏக் சரண் நாம் தர்மம்' (நவ-வைணவ நம்பிக்கை) என்ற போதனையை போதித்துப் பரப்புவதற்காக முதன்முதலில் கீர்த்தன் கர் (சத்ரா) அமைப்பை அவர் நிறுவினார்.
மனித பலி அல்லது நர பலி போன்ற இடைக்காலத்தின் பிற்போக்குத் தனமான நடைமுறைகளிலிருந்து அசாம் மக்களை அவர் மீட்டார்.
சங்கரி நடனம் மற்றும் சத்ரிய நடனம் என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய நடன வடிவத்தை அவர் உருவாக்கினார்.
இந்தியாவின் சங்கீத நாடக அகாடமியானது, 2000 ஆம் ஆண்டில் இதை ஒரு பாரம்பரிய நடன வடிவமாக அங்கீகரித்தது.