அறிவியலளார்கள் படிநிலை பகுத்தறிவு மாதிரி (HRM) எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
மனித மூளையில் உள்ள தகவல்களின் படிநிலை மற்றும் கால முறை அளவிலான செயலாக்கத்தினால் HRM உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரியானது 27 மில்லியன் அளவுருக்கள் மற்றும் 1,000 பயிற்சி மாதிரிகளை மட்டுமே பயன்படுத்துகிறது.
செயற்கை பொது நுண்ணறிவிற்கான (AGI) ARC-AGI-1 அளவுரு சோதனையில் HRM 40.3 சதவீதத்தைப் பெற்றது.
இந்த மாதிரியானது, சிந்தனைத் தொடர் (CoT) பகுத்தறிவைத் தவிர்க்கிறது என்பதோடு அதற்கு பதிலாக மேம்பட்ட துல்லியத்திற்காக மீண்டும் மீண்டும் மாற்றியமைக்கப் பட்ட தொடர் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறது.