TNPSC Thervupettagam

படிநிலை மேலாண்மை மற்றும் வேலை தரம் குறித்த ILO அறிக்கை

May 3 , 2025 18 days 54 0
  • 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துதல்: வேலைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ணிம மயமாக்கலின் பங்கு' என்ற தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவில் படிநிலை மேலாண்மை (AM) ஆனது, மிகவும் அதிகரித்த கண்காணிப்பு, மதிப்பிடல் மற்றும் வேலைத் தீவிரத்திற்கான "தெளிவான" சான்றுகளுடன் உள்ளதால் அது வேலை தரத்தில் சரிவுக்கு வழி வகுத்துள்ளது.
  • தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் வேலைக்கானத் தரத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகள் இல்லாமல், பிரான்சு மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் AM தொழில்நுட்பங்கள் வேலை அமைப்பில் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தின.
  • AM என்பது மிகவும் விரிவான தரவுகள் சேகரிப்பு, கண்காணிப்பு, அதற்கான நிகழ்நேர முடிவெடுத்தல் மற்றும் அளவீடுகள் சார்ந்த சில மதிப்பீடுகள் மூலம் பணிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்திறனை ஒதுக்கீடு செய்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதைக் குறிக்கிறது.
  • AM என்பது கிடங்குகள், தொழிற்சாலைகள், வாடிக்கையாளர் சேவை மையங்கள், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கட்டுமானத் துறை உள்ளிட்ட பல்வேறு வழக்கமான துறைகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்