TNPSC Thervupettagam

படிவம் 26 - திருத்தம்

March 7 , 2019 2307 days 740 0
  • சட்டத்துறை அமைச்சகமானது தேர்தலில் பங்கு கொள்ளும் வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதையும் வெளிநாட்டு சொத்து மதிப்புகளை தெரிவிப்பதையும் கட்டாயமாக்கியுள்ளது.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையையடுத்து, படிவம் 26-ஐ திருத்தி சட்ட அமைச்சகம் இதை மேற்கொண்டுள்ளது.
  • இதற்கு முன்பு, வேட்பாளர் வருமான வரியை (தன்னுடைய, வாழ்க்கைத் துணை மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்) மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அவர்களின் வெளிநாட்டு சொத்து மதிப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
  • இந்தத் திருத்தத்திற்குப் பின்பு, வேட்பாளர்கள் பின்வரும் விவரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
    • வேட்பாளர்கள் தங்களுடைய கடந்த ஒரு வருட காலம் மட்டும் அல்லாமல் கடந்த 5 வருடங்களுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • வேட்பாளர்கள் தன்னுடைய வெளிநாட்டு சொத்து மதிப்புகள் மற்றும் இந்து பிளவுப்படாத இந்துக் குடும்பத்தின் உறுப்பினர்கள் மற்றும் தன்னுடைய வாழ்க்கைத் துணையின் சொத்து மதிப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.

படிவம் 26

  • தேர்தலில் ஒரு வேட்பாளர் படிவம் 26 என்ற படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
  • இந்தப் படிவத்தில் அவருடைய சொத்துக்கள், கல்வித் தகுதிகள், முன்பு செய்த குற்றவியல் நிகழ்வுகள் (தண்டனை மற்றும் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகள்) மற்றும் பொது நிலுவைத் தொகை ஏதேனும் இருப்பின் அவற்றின் தகவல் ஆகியவை இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்